தொடரும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி… இயல்பு நிலைக்கு திரும்பும் பொருளாதாரம்

 

தொடரும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி… இயல்பு நிலைக்கு திரும்பும் பொருளாதாரம்

2021 ஜூன் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 8.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.

முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும். 2021 ஜூன் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 8.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு 2020 ஜூன் மாதத்தில் லாக்டவுன் கட்டுப்பாடுகள் காரணமாக முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 12.4 சதவீதம் சரிவு கண்டு இருந்தது.

தொடரும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி… இயல்பு நிலைக்கு திரும்பும் பொருளாதாரம்
நிலக்கரி

2021 மார்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 11.4 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. 2021 ஏப்ரல் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 60.9 சதவீதம் வளர்ச்சி கண்டது. 2021 மே மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 16.3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த நிதியாண்டில் ஏப்ரல்-மே மாத காலத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 35.8 சதவீதம் உயர்ந்துள்ளது.

தொடரும் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வளர்ச்சி… இயல்பு நிலைக்கு திரும்பும் பொருளாதாரம்
தொழில்துறை

கடந்த ஜூன் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் வளர்ச்சி கண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறை குறியீட்டை கணக்கிடுவதில் இந்த 8 துறைகளின் பங்களிப்பு சுமார் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதனால் எட்டு துறைகளின் துறைகளின் வளர்ச்சியை வைத்தே தொழில்துறை வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதை நம்மால் ஓரளவு யூகிக்க முடியும்.