ஜூனுக்கு ஜூலை பரவாயில்லை.. முக்கிய 8 துறைகள் உற்பத்தி 9.6 சதவீதம் வீழ்ச்சி…

 

ஜூனுக்கு ஜூலை பரவாயில்லை.. முக்கிய 8 துறைகள் உற்பத்தி 9.6 சதவீதம் வீழ்ச்சி…

கடந்த ஜூலை மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 9.6 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

முக்கிய 8 துறைகள் என்பது கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சிமெண்ட், நிலக்கரி, மின்சாரம், உருக்கு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் உரம் ஆகியவையாகும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த மார்ச் இறுதியில் லாக்டவுனை அமல்படுத்தியது. இதனால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி கண்டது. இருப்பினும் பின்னர் லாக்டவுன் விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தியதால் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி குறைந்தது.

ஜூனுக்கு ஜூலை பரவாயில்லை.. முக்கிய 8 துறைகள் உற்பத்தி 9.6 சதவீதம் வீழ்ச்சி…
ஸ்டீல் ஆலை

கடந்த ஜூன் மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 12.9 சதவீதம் வீழ்ச்சி கண்டு இருந்தது. கடந்த ஜூலையில் லாக்டவுன் விதிமுறைகள் மேலும் தளர்த்தப்பட்டன. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் வேகம் எடுத்தன. இந்நிலையில் நேற்று கடந்த ஜூலை மாத முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறித்த புள்ளிவிவரத்தை மத்திய அரசு வெளியிட்டது. அந்த மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி நிலவரத்தில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூலையில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி 9.6 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர்ந்து முக்கிய 8 துறைகளின் உற்பத்தி வீழ்ச்சி கண்டு வருவது மத்திய அரசுக்கு கவலை அளித்துள்ளது.

ஜூனுக்கு ஜூலை பரவாயில்லை.. முக்கிய 8 துறைகள் உற்பத்தி 9.6 சதவீதம் வீழ்ச்சி…
நிலக்கரி

2019 ஜூலையில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி 2.6 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. கடந்த ஜூலை மாதத்தில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தி குறைந்துள்ளதால் அந்த மாதத்தில் தொழில்துறை உற்பத்தியும் பின்னடைவை சந்தித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கிட்டத்தட்ட லாக்டவுன் விதிமுறைகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளதால் வரும் மாதங்களில் முக்கிய 8 துறைகளின் உற்பத்தியில் வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.