‘பீகார் டூ டெல்லி’ : போராட்டத்தில் கலந்து கொள்ள சைக்கிளில் 1000 கி.மீ பயணம் செய்த முதியவர்!

‘பீகார் டூ டெல்லி’ : போராட்டத்தில் கலந்து கொள்ள சைக்கிளில் 1000 கி.மீ பயணம் செய்த முதியவர்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த மாதம் 26ம் தேதியில் இருந்து டெல்லியில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த சட்டங்களை நீக்கினால் தான் போராட்டம் கைவிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்திருக்கும் விவசாயிகள், அங்கேயே உணவு சமைத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை தொடருகின்றனர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையிலும், வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

‘பீகார் டூ டெல்லி’ : போராட்டத்தில் கலந்து கொள்ள சைக்கிளில் 1000 கி.மீ பயணம் செய்த முதியவர்!

இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதாரவிலை இல்லாமல் போய்விடும் என பயந்து தான் விவசாயிகள் விடாப்பிடியாக இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். 22ஆவது நாளாக இன்றும் போரட்டம் தொடருகிறது. ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநில விவசாயிகள் மட்டும் அல்லாது பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் திரண்டு வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

‘பீகார் டூ டெல்லி’ : போராட்டத்தில் கலந்து கொள்ள சைக்கிளில் 1000 கி.மீ பயணம் செய்த முதியவர்!

இந்த நிலையில், பீகாரைச் சேர்ந்த முதியவர் சத்யதேவ் மஞ்சி(60) சுமார் 1000 கி.மீ பயணித்து டெல்லி போராட்டத்திற்கு வந்திருக்கிறார். டெல்லி – ஹரியானா எல்லையின் திக்ரி என்னும் இடத்தில் அவர் போராட்டத்தில் பங்கேற்றிருக்கிறார். தான் வருவதற்கு 11 நாட்கள் ஆனதாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரையில் போராட்டத்தில் இருப்பேன் என்றும் கூறியுள்ளார்.