சாலையில் சென்ற 8ம் வகுப்பு மாணவியின் உதட்டில் முத்தம் கொடுத்த முதியவர்

 

சாலையில் சென்ற 8ம் வகுப்பு மாணவியின் உதட்டில் முத்தம் கொடுத்த முதியவர்

திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் – புட்லூர் சாலையில் வசித்து வரும் முருகன், கட்டிட தொழிலாளியாய இருந்து வருகிறார். இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, 8ம் வகுப்பு படித்து வரும் 12 வயது சிறுமி அந்த பக்கமாக போயிருக்கிறார்.

சாலையில் சென்ற 8ம் வகுப்பு மாணவியின் உதட்டில் முத்தம் கொடுத்த முதியவர்

அந்த சிறுமியை திடீரென்று முருகன் அழைத்திருக்கிறார். பெரியவர் ஏதே சேதி சொல்ல அழைக்கிறார் என்று நினைத்து சிறுமி அருகே சென்றிருக்கிறார். அப்போது அச்சிறுமி கொஞ்சம் எதிர்பாராத வகையில், சிறுமியை கட்டிப்பிடித்து முகத்தை பிடித்து உதட்டில் முத்தம் கொடுத்துள்ளார் முருகன்.

இதில் அதிர்ந்துபோன சிறுமி அங்கே நிற்காமல் ஓடிச்சென்று வீட்டுக்குள் சென்றுவிட்டார். தாயிடம் சொல்லி அழுதிருக்கிறார்.

சாலையில் சென்ற 8ம் வகுப்பு மாணவியின் உதட்டில் முத்தம் கொடுத்த முதியவர்

இதனால் ஆத்திரம் கொண்ட சிறுமியின் தாய், முருகனிடம் வந்து திட்டியபோது, அப்பெண்ணை தரக்குறைவாக பேசி துரத்தியிருக்கிறார் முருகன்.

இதையடுத்து திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் முருகன் மீது சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜாமணி, முருகன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்ய சென்றிருக்கிறார். ஆனால், முருகன் தலைமறைவாகி இருக்கிறார்.

இதற்கிடையில் முருகன் பட்டாபிராம் பகுதியில் பதுங்கி இருக்கும் தகவல் அறிந்து அங்கே சென்று முருகனை கைது செய்த போலீசார், திருவள்ளூர் கோர்டில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

நீதிபதியின் உத்தரவின் பேரில் முருகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.