அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 10 மாவட்டங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கு.. ஒடிசா அரசு அறிவிப்பு

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 10 மாவட்டங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கு.. ஒடிசா அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, ஏப்ரல் 5ம் தேதி முதல் சுந்தர்கார்க் உள்பட 10 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமலுக்கு வருகிறது என ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

நம் நாட்டில் தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி உள்பட சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. ஒடிசாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அம்மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முதல்வர் நவீன் பட்நாயக் தலைலைமயிலான பிஜூ ஜனதா தளம் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 10 மாவட்டங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கு.. ஒடிசா அரசு அறிவிப்பு
நவீன் பட்நாயக்

அதன் ஒரு பகுதியாக சுந்தர்கர் உள்பட 10 மாவட்டங்களில் இரவு ஊரடங்கை ஒடிசா அரசு அறிவித்துள்ளது. அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: சில மாவட்டங்களில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து காணலாம். எனவே பொதுமக்களின் நலனுக்காகவும், தொற்று நோயின் பரவலை தவிர்க்கவும் 10 மாவட்டங்களில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும்.

அதிகரிக்கும் கொரோனா பரவல்.. 10 மாவட்டங்களில் நாளை முதல் இரவு ஊரடங்கு.. ஒடிசா அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஏப்ரல் 5ம் தேதி முதல் சுந்தர்கர், ஜார்சுகுடா, சம்பல்பூர், பார்கர், போலங்கீர், நுவாபாடா, கலஹந்தி, நவரங்க்பூர், கோராபுட் மற்றும் மல்கன்கிரி ஆகிய 10 மாவட்டங்கில் இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சில அத்தியாவசிய சேவைகள் மற்றும் பணிகளுக்கு இந்த இரவு ஊரடங்கில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.