‘ரூ.2 ஆயிரம் லஞ்சம்’ கேட்டு வசமாக சிக்கிய செவிலியர்!

 

‘ரூ.2 ஆயிரம் லஞ்சம்’ கேட்டு வசமாக சிக்கிய செவிலியர்!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த பழனியம்மாள்(51), தரகம்பட்டியில் இருக்கும் சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் 15 ஆண்டுகளாக அங்கு பணிபுரிவதாக தெரிகிறது. இந்த நிலையில், சிந்தாமணிபட்டியில் வசித்து வரும் கர்ப்பிணி இளமதி மகப்பேறு நிதிஉதவிக்காக பழனியம்மாளை அணுகியுள்ளார்.

‘ரூ.2 ஆயிரம் லஞ்சம்’ கேட்டு வசமாக சிக்கிய செவிலியர்!

அப்போது, நிதியுதவி பெற்றுத் தர பழனியம்மாள் ரூ.2 ஆயிரம் லஞ்சம் கேட்டிருக்கிறார். கடுப்பான இளமதி, லஞ்சம் கொடுப்பதாக சொல்லிவிட்டு உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கிறார். அந்த தகவலின் பேரில், இளமதியிடம் ரசாயனம் தடவிய ரூ.2 ஆயிரம் நோட்டை அதிகாரிகள் கொடுத்து அனுப்பியுள்ளனர்.

அந்த பணத்தை இளமதியிடம் இருந்து பழனியம்மாள் வாங்கும் போது, அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். பழனியம்மாள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது.