‘வடகிழக்கு பருவமழை தாமதமாகிறது’ : சென்னை வானிலை ஆய்வு மையம்

 

‘வடகிழக்கு பருவமழை தாமதமாகிறது’ : சென்னை வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை செப்டம்பர் மாதத்தில் தொடங்குவது வழக்கம். ஆனால் வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி வருகிறது. அத்துடன் இந்திய – பசிபிக் கடல் பகுதியில் நிலவ கூடிய வெப்பநிலை காரணமாக தென்மேற்கு திசையில் தொடர்ந்து காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதம் ஆகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

‘வடகிழக்கு பருவமழை தாமதமாகிறது’ : சென்னை வானிலை ஆய்வு மையம்

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை வருகிற 25ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தாமதமாக உருவாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘வடகிழக்கு பருவமழை தாமதமாகிறது’ : சென்னை வானிலை ஆய்வு மையம்

அதே சமயம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு ஆயுத்தமாகி வருகிறது. இதன் காரணமாக வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என்று சுகாதாரத் துறையினருக்கு பொது சுகாதார துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். வருவாய்த் துறையுடன் இணைந்து மீட்பு பணியை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .