ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு.. ஏமாந்த காங்கிரஸ்

 

ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு.. ஏமாந்த காங்கிரஸ்

ஹரியானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆளும் பா.ஜ.க.-ஜே.ஜே.பி. கூட்டணி அரசு தோற்கடித்தது.

ஹரியானா சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான பூபிந்தர் சிங் ஹூடா, விவசாயிகளின் போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பா.ஜ.க.-ஜே.ஜே.பி. கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பூபிந்தர் சிங் ஹூடா பேசுகையில், விவசாயிகளின் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கான விவசாயிகள் இறந்ததை கட்டார் கட்டார் புறக்கணித்தார் என்று தெரிவித்தார்.

ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு.. ஏமாந்த காங்கிரஸ்
முதல்வர் மனோகர் லால் கட்டார்

ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் தனது அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பேசுகையில், 6 மாதங்களுக்கு ஒரு முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது காங்கிரசுக்கு பழக்கமாகி விட்டது. காங்கிரசுக்கு எதற்கும் நம்பிக்கை இல்லை. இந்திய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியை கூட அவர்கள் நம்பவில்லை. ஆளும் கட்சி செய்யும் எதையும் காங்கிரஸ் நம்பவில்லை என்று குற்றம் சாட்டினார்.

ஹரியானாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பா.ஜ.க. அரசு.. ஏமாந்த காங்கிரஸ்
காங்கிரஸ்

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் முடிவடைந்தபிறகு, அந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், காங்கிரஸ் கொண்டு வந்த நம்பி்க்கையில்லா தீர்மானத்தை பா.ஜக.-ஜே.ஜே.பி. கூட்டணி அரசு தோற்கடித்தது. தீர்மானத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் 30 எம்.எல்.ஏ.க்கள் உள்பட மொத்தம் 32 பேர் மட்டுமே வாக்களித்தனர். அதேசமயம் அந்த தீர்மானத்துக்கு எதிராக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 39 பேர் உள்பட மொத்தம் 55 பேர் வாக்களித்ததாக சபாநாயகர் கியான் சந்த் குப்தா அறிவித்தார்.