நவம்பர் மாதம் கொரொனா உச்சத்தை எட்டும் என்ற தகவல் தவறானது! – மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம்

 

நவம்பர் மாதம் கொரொனா உச்சத்தை எட்டும் என்ற தகவல் தவறானது! – மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நவம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கூறியதாக வெளியான தகவலை அந்த நிறுவனம் மறுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தினம் தினம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. வர இருக்கும் மாதங்களில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் கொரோனா தன்னுடைய உச்சத்தை வருகிற நவம்பர் மாதம் தான் அடையும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.எம்.ஆர்) கூறியதாக செய்தி நிறுவனம் கூறியது. இதன் அடிப்படையில் செய்திகள் வெளியாகின.

நவம்பர் மாதம் கொரொனா உச்சத்தை எட்டும் என்ற தகவல் தவறானது! – மருத்துவ ஆராய்ச்சி கழகம் விளக்கம்தற்போது இந்த தகவலை ஐ.சி.எம்.ஆர் மறுத்துள்ளது. இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஐ.சி.எம்.ஆர், ஐ.சி.எம்.ஆர் வெளியிட்ட ஆய்வு அறிக்கை தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் உச்சத்தை எட்டும் என்று வெளியான தகவல் ஐ.சி.எம்.ஆர் வெளியிட்டது இல்லை, அதிகாரப்பூர்வமாக யாரும் இதை தெரிவிக்கவில்லை” என்று கூறியுள்ளது.

http://


நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளை சமாளிக்க ரயில் பெட்டி மருத்துவமனைகள் அனுப்பப்பட்டு வருகின்றன, கல்லூரி விடுதி அறைகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில், உச்ச நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் கொரோனா தாக்கம் எப்படி இருக்கும் என்று புள்ளிவிவரங்களை அளித்துள்ளன. ஆனால், திடீரென்று கொரோனா உச்சத்தை அடைந்துவிட்டது போன்ற தோற்றத்தை மத்திய, மாநில அரசுகள் உருவாக்குவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.