தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

 

தேசிய கொடியேற்றினார்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

சென்னை மெரினாவில் 72வது குடியரசு தின விழா நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

தேசிய கொடியேற்றினார்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

நாடு முழுவதும் 72-வது குடியரசு தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். குடியரசு தின விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தலால் நிகழ்ச்சிகளை காண 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கதேசம் உருவாகி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் டெல்லியில் இந்திய குடியரசு தின விழா அணிவகுப்பில் முதல் முறையாக வங்கதேச ராணுவம் பங்கேற்கிறது.

தேசிய கொடியேற்றினார்  ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சென்னை மெரினாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து பல்வேறு படைப்பிரிவுகள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். குடியரசு தின விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். நாட்டின் பல்வேறு துறைகளில் உள்ள சாதனையை விளக்கும் வகையில் வாகன அணிவகுப்பும் மெரினா கடற்கரை சாலையில் ஊர்வலமாக அணிவகுத்து சென்றது.