“30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட்டாலும் நமது கல்வி முறை மாறவில்லை” : பிரதமர் மோடி

“30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட்டாலும்  நமது கல்வி முறை மாறவில்லை” : பிரதமர் மோடி

புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றினார்.

“30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட்டாலும்  நமது கல்வி முறை மாறவில்லை” : பிரதமர் மோடி

மத்திய கல்வி அமைச்சகம் மாநாட்டின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ’21 ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ என்ற தலைப்பில் காணொலி மூலம் உரையாற்றினார். ஏற்கனவே முதல் நாளில் மாநில அரசுகளுடன், குடியரசுத் தலைவர் ராம்நாத் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து புதிய கல்வி கொள்கை குறித்து மோடி பேசினார்.

அதில், “30 ஆண்டில் உலகில் ஒவ்வொரு பிராந்தியமும் மாறினாலும் நமது கல்வி முறை மட்டும் பழைய முறைப்படி தொடர்கிறது. புதிய இந்தியா, புதிய எதிர்பார்ப்பு, புதிய தேவை ஆகியவற்றை புதிய கல்விக்கொள்கை பூர்த்தி செய்யும். புதிய கல்விக் கொள்கைக்காக ஐந்து ஆண்டுகள் உழைத்தும் பணி இன்னும் முடியவில்லை. புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மழலைக்கல்வியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் “என்று கேட்டுக்கொண்டார்.