தி.நகர் தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறப்பு!

 

தி.நகர் தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறப்பு!

சென்னை தி நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டு வரும் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறக்கப்படுகிறது.

சென்னை பாண்டிபஜார் எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் இடம். காரணம் அங்கு துணி, நகை, உணவகங்கள் என பல கடைகள் அமைந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் அதிகம். ஷாப்பிங் வரும் மக்களும் வாகனம் நிறுத்த வழியன்றி அவதிபடுவர். இதன் காரணமாக சமீபத்தில் பாண்டி பஜார் ஸ்மார்ட்சிட்டியாக மாற்றப்பட்டது.இதன் எதிரொலியாக பாண்டி பஜாரில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் கட்டப்பட்டு வருகிறது.

தி.நகர் தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறப்பு!

இந்நிலையில் சென்னை தி நகர் பாண்டி பஜாரில் அமைக்கப்பட்டு வரும் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறக்கப்படும் என அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

தி.நகர் தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபரில் திறப்பு!

ரூ. 40 .79 கோடியில் உருவாகும் வாகன நிறுத்தம் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் மக்களுக்காக திறக்கப்படுகிறது என்றும் முதல்வர் ஒப்புதலுடன் வாகன நிறுத்தம் திறக்கப்பட உள்ளதாக சென்னையில் நடந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார். ஆறு தளங்களைக் கொண்ட வாகன நிறுத்தத்தில் 500 இரு சக்கர வாகனங்கள், 200 நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தலாம் என்று தெரிகிறது.