’எனக்காக காத்திருக்க வேண்டாம்’ திறப்பு விழாவை உள்ளூர்காரர்களை வைத்து நடத்தி எம்.பி

 

’எனக்காக காத்திருக்க வேண்டாம்’ திறப்பு விழாவை உள்ளூர்காரர்களை வைத்து நடத்தி எம்.பி

கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்று உலக நாடுகளே கைகளைப் பிசைந்தவாறே திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் மரணம் அடைபவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கட்டுப்படுத்துவது தான் இன்றைய உலகில் முன் உள்ள மாபெரும் சவால். ஆனால், துரதிஷ்டசவசமாக இக்கேள்விகளுக்கு பதில்கள் இல்லை.

’எனக்காக காத்திருக்க வேண்டாம்’ திறப்பு விழாவை உள்ளூர்காரர்களை வைத்து நடத்தி எம்.பி

இன்னும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை. ஆயினும் பல நாடுகளில் இதற்கான ஆய்வுகளில் விஞ்ஞானிகள் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா நோய்த் தொற்றல் காரணமாக, பலரும் வீட்டுக்குள் முடங்கும் சூழல். பல அரசியல்வாதிகளும் நிவாரண பணிகள் தொடர்பாக மட்டுமே வெளியே செல்கின்றனர்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர் கொரோனா முடக்கத்தால் செய்த விஷயம் பலரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

’எனக்காக காத்திருக்க வேண்டாம்’ திறப்பு விழாவை உள்ளூர்காரர்களை வைத்து நடத்தி எம்.பி

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் மாணிக்கம் தாகூர். பாராளுமன்ற மன்ற உள்ளூர் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அருப்புக்கோட்டையில் நீர்தேக்கத் தொட்டி பணிகளை முடிக்கப்பட்டிருந்தன.

இந்தக் கட்டடத்தைத் திறக்க மாணிக்கம் தாகூர் செல்வார் எனக் கூறப்பட்டது. பொதுவாக, இதுமாதிரியான திறப்பு விழாக்களுக்கு அப்பகுதி எம்.எல்.ஏ, எம்.பிகள் செல்வது வழக்கம்.

கொரோனா சூழலால் தன்னால் அந்தப் பகுதிக்குச் செல்ல முடியாது என்பதால், அந்தப் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உள்ளூர் வாசிகளை வைத்து திறக்க வைத்திருக்கிறார். ’தண்ணீர் பிரச்னை தீர எனக்காக காத்திருக்க வேண்டாம்; என்று பதிவிட்டு உள்ளார்.

இது சோஷியல் மீடியாவில் பலரின் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.