“அரசியலை விட்டு விலக தயார்” : அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் சவால்!

“அரசியலை விட்டு விலக தயார்” : அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் சவால்!

தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அங்கமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இருக்கும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“அரசியலை விட்டு விலக தயார்” : அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் சவால்!

சட்டமன்ற தேர்தலையொட்டி திமுக – அதிமுக கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன. அந்த வகையில் திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள கிராமம் தோறும் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டம் தேவராயபுரம் ஊராட்சியில் நடைபெறும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

“அரசியலை விட்டு விலக தயார்” : அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் சவால்!

அதில் , “தமிழகத்திலேயே கோவையில்தான் அதிக முறைகேடுகள் நடைபெறுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒருமுறை கூட கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.திமுக தேர்தல் அறிக்கையில் மிக முக்கிய அங்கமாக ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை இருக்கும் . திமுக ஆட்சி அமைந்த பிறகு, விசாரணை நடத்தி தண்டனை வாங்கி கொடுப்பது உறுதி. கிராம சபை கூட்டத்தை தடுத்தாலும், மக்களை சந்திப்பதை தடுக்க முடியாது . 12 ஆயிரத்து 600 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. மக்கள் கிராம சபை கூட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.

“அரசியலை விட்டு விலக தயார்” : அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் சவால்!

தொடர்ந்து பேசிய அவர், ஊழல் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கவில்லை என்றால் நான் அரசியலை விட்டு விலக தயார்; நிரூபித்துவிட்டால் அமைச்சர் வேலுமணி அரசியலை விட்டு விலகத் தயாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.