ஓபிஎஸ் மகன் காலில் ‘பொத்தென்று’ விழுந்த சிட்டிங் எம்எல்ஏ : கடுப்பில் சீனியர்கள்!

ஓபிஎஸ் மகன் காலில் ‘பொத்தென்று’ விழுந்த சிட்டிங் எம்எல்ஏ : கடுப்பில் சீனியர்கள்!

சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கம் ஓபிஎஸ் மகன் காலில் விழுந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஓபிஎஸ் மகன் காலில் ‘பொத்தென்று’ விழுந்த சிட்டிங் எம்எல்ஏ : கடுப்பில் சீனியர்கள்!

தமிழகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கும் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள அதிமுக ஹாட்ரிக் வெற்றி அடித்து விடவேண்டும் என்று போராடும் நிலையில் முதல்முறையாக முதல்வர் வேட்பாளராக களமிறங்கவுள்ள ஸ்டாலின் முதல்வர் நாற்காலியை பிடித்து விட வேண்டும் என நேரடியாக மோதி கொண்டுள்ளனர். இதற்கான தேர்தல் பணிகள் சிறப்பாக மாவட்டவாரியாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் ஒருபுறம் வேட்புமனு தாக்கலும் நடந்து வருகிறது. இதுவரை 981 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஓபிஎஸ் மகன் காலில் ‘பொத்தென்று’ விழுந்த சிட்டிங் எம்எல்ஏ : கடுப்பில் சீனியர்கள்!

இந்நிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர் மாணிக்கம். இவர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய வாடிப்பட்டி தாலுகா அலுவகத்திற்கு வந்தார். அப்போது அவருடன் துணை முதல்வர் ஓபிஎஸ் மகனும் எம்.பி.யுமான ரவீந்திரநாத் வந்திருந்தார். அப்போது தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை அளிப்பதற்கு முன்பு வேட்பாளர் மாணிக்கம், ரவீந்திரநாத் காலில் விழுந்து ஆசி பெற்றார். இது அங்கிருந்த மூத்த நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கியது.