சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைதான அமைச்சர் நள்ளிரவில் விடுதலை

 

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைதான அமைச்சர் நள்ளிரவில் விடுதலை

மராட்டிய மாநிலத்தில் கடந்த 23.8.2021 அன்று நிகழ்ந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் நாராயண் ராணே, சுதந்திரன் தின உரையின்போது சுதந்திரம் அடைந்து எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என்று உதவியாளரிடம் கேட்டு முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியதாக குறிப்பிட்டார்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைதான அமைச்சர் நள்ளிரவில் விடுதலை

அவர் மேலும், இது வெட்கக்கேடானது. நான் அந்த இடத்தில் இருந்திருந்தால் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்று பேசினார்.

நாராயண் ராணேவின் இந்த பேச்சு சிவசேனா கட்சியினரை கொந்தளிக்க வைத்தது. ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் நாராயண் ராணேவின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாசிக் போலீசார் அமைச்சர் நாராயண் ராணேவை கைது செய்தனர்.

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைதான அமைச்சர் நள்ளிரவில் விடுதலை

மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிந்தவரை கைது செய்ததால் போலீசார் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று அமைச்சர் ஆதரவாளர்கள் வாதிட்டனர்.

கைது செய்யப்பட்ட அமைச்சரை மஹத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முதலமைச்சர் குறித்து சர்ச்சையாக பேசியதால் நாராயண் ராணேவை 7 நாள் காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று போலீசார் அனுமதி கேட்டனர். ஆனால் ராணே தரப்பு வழக்கறிஞர், இது அரசியல் நோக்கம் கொண்ட கைது என்பதால் போலீஸ் காவல் தேவையில்லை. கைது செய்யப்பட்டதே சட்டவிரோதம். குற்றம் சாட்டப்பட்டவரிடம் விளக்கமெதுவும் பெறாமலேயே கைது செய்துவிட்டனர் என்று வாதிட்டார். இதையடுத்து நாராயண் ராணேவை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்தார் நீதிபதி.

சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கைதான அமைச்சர் நள்ளிரவில் விடுதலை
,

மதியம் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது கைதான அமைச்சர் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டார்.