தினகரன் – கடம்பூர் ராஜூ மோதல் : கூட்டணி கட்சியை அனுப்பி ஆழம் பார்க்கும் ஸ்டாலின்

தினகரன் – கடம்பூர் ராஜூ மோதல் : கூட்டணி கட்சியை அனுப்பி ஆழம் பார்க்கும் ஸ்டாலின்

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் திமுக நேற்று தனது கூட்டணிக் கட்சிகள் போட்டியிடவுள்ள தொகுதி பட்டியலை வெளியிட்டது. இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் திருப்பரங்குன்றம், கந்தர்வகோட்டை, திண்டுக்கல், கோவில்பட்டி, அரூர், கீழ்வேளூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தினகரன் – கடம்பூர் ராஜூ மோதல் : கூட்டணி கட்சியை அனுப்பி ஆழம் பார்க்கும் ஸ்டாலின்

தொகுதிப் பட்டியல் ஒதுக்கீடு தொடர்பாக நேற்று திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் , வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்றும் தாங்கள் கேட்ட ஒரு சில தொகுதிகள் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

தினகரன் – கடம்பூர் ராஜூ மோதல் : கூட்டணி கட்சியை அனுப்பி ஆழம் பார்க்கும் ஸ்டாலின்

முன்னதாக கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கவுள்ளனர். அந்த வகையில் திமுக சார்பில் அதன் கூட்டணி கட்சியான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் களமிறங்கவுள்ளது.