கையில் காசில்லை.. 14 மணி நேரமாக காத்திருந்தும் சிகிச்சை அளிக்காததால் நோயாளி மரணம்.. மத்திய பிரதேசத்தில் கொடூரம்

 

கையில் காசில்லை.. 14 மணி நேரமாக காத்திருந்தும் சிகிச்சை அளிக்காததால் நோயாளி மரணம்.. மத்திய பிரதேசத்தில் கொடூரம்

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்ட அரசு மருத்துவமனையில் பதிவு சீட்டு பெறவில்லையென்று, 14 மணி நேரம் சிகிச்சை அளிக்காததால் நோயாளி இறந்த சம்பவம் மீடியாக்களில் வெளிவந்து மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து மத்திய பிரதேச மனித உரிமைகள் ஆணையம் இந்த விவகாரம் தொடர்பாக 3 வாரத்துக்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும்படி குணா மாவட்ட கலெக்டர், தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மனித உரிமைகள் ஆணையம் இது தொடர்பாக கூறியதாவது: அசோக் நகரை சேர்ந்த ஆரத்தி ராஜக் (வயது 20) என்ற பெண் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கணவர் சுனில் தக்காட்டை (வயது 22) கடந்த புதன்கிழமையன்று குணா மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.

கையில் காசில்லை.. 14 மணி நேரமாக காத்திருந்தும் சிகிச்சை அளிக்காததால் நோயாளி மரணம்.. மத்திய பிரதேசத்தில் கொடூரம்

பின் மருத்துவமனையில் உள்ள கவுண்டருக்கு சென்று அங்கு இருந்த பணியாளரிடம் விவரத்தை கூறியுள்ளார். உடனே அங்கு பணியாளர்கள் மருத்துவமனையில் சேர்ப்பதாக இருந்தால் பதிவு செய்ய வேண்டும் அதற்கு பணம் வேண்டும் என்று கூறியுள்ளார். ஆரத்தி ராஜக்கிடம் கையில் சுத்தமாக பணம் இல்லை. இதனால் மருத்துவமனை வெளியே இரவு முழுவதும் நோய்வாய்ப்பட்ட கணவர் மற்றும் இரண்டரை வயது குழந்தையுடன் மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார். பின் மறுநாள் காலையில் பதிவு செய்வதற்காக முயற்சி செய்தபோது, வெளிய உள்ள கவுண்டர் இன்னும் சிறிது நேரத்தில் திறக்கும் அதில் பதிவு செய்ய வேண்டும் அந்த பெண்ணிடம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த பெண் காத்திருந்தாள். அதேசமயம் காலை 8 மணி அளவில் அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.

கையில் காசில்லை.. 14 மணி நேரமாக காத்திருந்தும் சிகிச்சை அளிக்காததால் நோயாளி மரணம்.. மத்திய பிரதேசத்தில் கொடூரம்

குணா மாவட்ட மருத்துவமனையில் எப்போதும் பாதுகாவலர்கள், ஒரு போலீஸ் போஸ்ட் உண்டு இதுதவிர இரவு நேரத்தில் மெயின் கேட்டில் 2 வார்டு பாய்கள் மற்றும் அவசர பணிக்காக டாக்டர்கள் மற்றும் கவுண்டரில் 2 அலுவலர்களும் உண்டு. அவர்கள் அனைவரும் அந்த பெண் மற்றும் அவரது கணவரின் கவலைக்கிடமான நிலைமை புறக்கணித்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்து போன சுனில் தக்காட்டின் மனைவி ஆரத்தி ராஜக் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனையில் இருந்து யாரும் எங்களுக்கு உதவிக்கு வரவில்லை. சீட்டு பதிவுசெய்யப்படாதபோது, மருத்துவரை எப்படி பார்க்க முடியும்? அவர் இறந்த பிறகும் ஒரு மணி நேரம் யாரும் வரவில்லை என தெரிவித்தார்.