பசி, வறுமை, வேலையின்மை… கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்துக்கு அதிக விலை கொடுத்த ஏழைகள்….

 

பசி, வறுமை, வேலையின்மை… கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்துக்கு அதிக விலை கொடுத்த ஏழைகள்….

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு நாடு தழுவிய லாக்டவுனின் 4ம் கட்டம் இன்றோடு முடிவடைகிறது. இன்று வரையிலான 68 நாட்கள் லாக்டவுனால் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதேசமயம் ஏழைகள் இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்துக்கு பசி, வறுமை மற்றும் வேலையின்மை என அதிக விலை கொடுத்துள்ளனர். லாக்டவுனால் ஏற்பட்ட திடீர் பொருளாதார சீர்குலைவால் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும், வீட்டு வேலை செய்பவர்கள், தினசரி சம்பள தொழிலாளர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் புலம்பெயர்தவர்கள் என மொத்தம் 12 கோடி வேலையை இழந்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பசி, வறுமை, வேலையின்மை… கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்துக்கு அதிக விலை கொடுத்த ஏழைகள்….

அண்மையில் இணையத்தில் வைரலான வீடியோக்களான, தனது தாய் இறந்து விட்டது கூட தெரியாத தெரியாமல் ஒரு சிறு குழந்தை இறந்த தாயின் உடலை தொட்டு எழுப்ப முயற்சிக்கும் மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் பசியால் வாடிய ஒரு மனிதன் நாயின் சடலத்தை சாப்பிடும் காட்சிகள் லாக்டவுனால் இந்திய ஏழைகள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான தீவிரமான உதாரணங்கள். கோடிக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் குறைந்த ஊதிய வேலைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் லாக்டவுன் சமயத்தில் இன்னும் வருமானம் ஆதாரங்கள் இல்லாததால் தொடர்ந்து கடுமையான சிரமங்களை எதிர்கொள்கின்றனர். பெரும்பாலான தங்களிடம் இருந்த சிறிய சேமிப்புகளை தீர்த்துவிட்டார்கள் மற்றவர்கள் வீட்டுக்கு செல்வதற்காக தங்களது உடைமைகளை விற்பனை செய்து விட்டனர்.

பசி, வறுமை, வேலையின்மை… கொரோனா வைரசுக்கு எதிரான யுத்தத்துக்கு அதிக விலை கொடுத்த ஏழைகள்….

மே 31ம் தேதிக்கு பிறகு லாக்டவுன் விதிமுறைகளை தளர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், நம் நாட்டில் குறைந்தபட்சம் 10 கோடி ஏழை இந்தியர்கள் உலக வங்கி நிர்ணயித்துள்ள வறுமை கோட்டு அளவான 3.2 டாலருக்கு (சுமார் ரூ.240) கீழே தள்ளப்படுவார்கள் என நிபுணர்கள் சொல்கின்றனர். ஒரு மனிதன் ஒருநாள் வாழ தேவையான பொருட்கள் வாங்க தேவைப்படும் பணத்தை அடிப்படையாக கொண்டு வறுமைக்கோடு கணக்கிடப்படுகிறது. ஒரு நாளைக்கு 3.2 டாலருக்கும் குறைவாக வருமானம் ஈட்டுபவர்கள் வறுமைகோட்டுக்கு கீழே உள்ளவர்கள் என எடுத்துக்கொள்ளலாம்.