யாருக்கு எந்த தொகுதி? திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

 

யாருக்கு எந்த தொகுதி? திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.

யாருக்கு எந்த தொகுதி? திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுத்தேர்தலையொட்டி திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி ,மதிமுக ,கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடும் நிறைவு பெற்றுவிட்டது. அதாவது காங்கிரஸ் கட்சிக்கு 25 ,மதிமுக, விசிக ,கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 6 தொகுதிகள் திமுக சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள், முஸ்லிம் லீக் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எந்த தொகுதி? திமுக வேட்பாளர்கள் பட்டியல் தயார்!

இந்நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரங்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் இன்று வெளியிட உள்ளார். ஏற்கனவே கூட்டணி கட்சிகள் தாங்கள் விரும்பும் தொகுதிகளின் பட்டியலை திமுக தலைமை கழகம் ஒப்படைத்து விட்டது .இதில் ஒரு கட்சி கேட்கும் தொகுதியை மற்றொரு கட்சியும் கேட்பதால் இழுபறி நீடித்து வந்த நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.