பழம்பெரும் பாடலாசிரியர் பி. கே. முத்துசாமி காலமானார்!

பழம்பெரும் பாடலாசிரியர் பி. கே. முத்துசாமி காலமானார்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த பழம்பெரும் பாடலாசிரியரும், தமிழறிஞருமான பி. கே. முத்துசாமி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 102.

பழம்பெரும் பாடலாசிரியர் பி. கே. முத்துசாமி காலமானார்!

‘வெண்பா கவிஞர்’ எனப் போற்றப்படும் பி. கே. முத்துசாமி 1958 இல் வெளியான தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற திரைப்படத்தில் ‘மண்ணுக்கு மரம் பாரமா? மரத்துக்கு இலை பாரமா?’ என்ற புகழ் பெற்ற  பாடலை எழுதியவர். அத்துடன் சின்ன சின்ன நடைநடந்து, செம்பவள வாய் திறந்து என்ற பாடல், கண்ணும் கண்ணும் கதை பேசி, ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்த போன்ற பல பாடல்களை எழுதியுள்ளார்.

பழம்பெரும் பாடலாசிரியர் பி. கே. முத்துசாமி காலமானார்!

இந்நிலையில் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த பி. கே. முத்துசாமி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.