’ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாஸ்’ பிரபல மருத்துவ இதழ் கருத்து

 

’ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாஸ்’ பிரபல மருத்துவ இதழ் கருத்து

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 64 லட்சத்து  68 ஆயிரத்து 013 பேர். கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 86 லட்சத்து 61 ஆயிரத்து 847 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 73 ஆயிரத்து 221 பேர்.

’ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாஸ்’ பிரபல மருத்துவ இதழ் கருத்து

கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு எனும் நிலைமையை நோக்கி உலக சூழல் மாறிவிட்டது. ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடித்துள்ளது. அதை ஆகஸ்ட் 12-ம் தேதி பதிவு செய்துவிட்டது.

ஸ்புட்னிக் V எனும் பெயரிடப்பட்டுள்ள அந்தத் தடுப்பூசியின் நம்பகத்தன்மையை உலகம் அறிந்துகொள்ள, தம் மகளுக்கே செலுத்தினார் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின். ஆனாலும், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் தடுப்பூசியின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி வந்தன.

’ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாஸ்’ பிரபல மருத்துவ இதழ் கருத்து
. (AP Photo/Ted S. Warren)

இந்நிலையில் லண்டனிலிருந்து வெளியாகும் பிரபல மருத்துவ இதழான லான்செட் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பற்றிய கட்டுரையை எழுதியுள்ளது.

’ரஷ்யா கேமலயா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி எவ்வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தவில்லை. எதிர்ப்புசக்தியை அதிகரிகரிக்கவும் செய்கிறது. 21 நாட்களுக்குள் 76 பேருக்கும் உடலில் நல்ல விதமான எதிர்ப்பு சகதியை அதிகரிக்கச் செய்துள்ளது. வைரஸை எதிர்கொள்ளும் எதிர்ப்பு செல்களும் உற்பத்தியாகியுள்ளன” என்று பாராட்டி எழுதியுள்ளது.

’ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பாஸ்’ பிரபல மருத்துவ இதழ் கருத்து

லான்செட் பத்திரிகை 97 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட ஓர் இதழ். அதன் பார்வை என்பது பலருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.