’ஐபிஎல் கோப்பை நிச்சயம் இந்த அணிக்குத்தான்!’ ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ

’ஐபிஎல்  கோப்பை நிச்சயம்  இந்த அணிக்குத்தான்!’ ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ

ஐபிஎல் போட்டிகளுக்கு அனைத்து அணிகளுமே உற்சாகமாகப் பயிற்சி எடுத்து வருகின்றன.

 கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’ஐபிஎல்  கோப்பை நிச்சயம்  இந்த அணிக்குத்தான்!’ ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ

இந்த ஆண்டு ஐபிஎல் கடும்போராட்டத்தில்தான் நடக்கிறது. ஏனெனில், சென்னையில் உற்சாகமாக பயிற்சி ஈடுபட்ட சுரேஷ் ரெய்னா ஐக்கிய அமீரகம் சென்றதும், சொந்த காரணங்களால் தொடரிலிருந்து விலகினார்.

சுரேஷ் ரெய்னாவைப் போலவே ஹர்பஜன் சிங்கும் தனிப்பட்ட காரணங்களால் அணியிலிருந்து விலகினார். கேன் ரிச்சர்ட்சன், மலிங்கா உள்ளிட்ட வீரர்களும் ஐபிஎல் போட்டியிருந்து விலகிவிட்டனர்.

’ஐபிஎல்  கோப்பை நிச்சயம்  இந்த அணிக்குத்தான்!’ ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ, இந்த ஆண்டு ஐபிஎல் பற்றிய தனது யூகத்தைச் சொல்லியிருக்கிறார்.

‘நிச்சயம் இந்த ஐபிஎல் கோப்பையை எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் டீமே வெல்லும்.’ என்று அடித்துச் சொல்லியிருக்கிறார்.

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம் கட்டாயம்  ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழையும் என்று தெரிவித்திருக்கிறார்.

’ஐபிஎல்  கோப்பை நிச்சயம்  இந்த அணிக்குத்தான்!’ ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா, ஜர்பஜன் சிங் இல்லாவிட்டாலும் தோனியின் கேப்டன் ஷிப்பும் மற்ற வீரர்களின் அனுபவம் மிக்க ஆட்டத்திறனும் கோப்பையை வெல்ல உதவும் என்றே பலரும் தெரிவித்துவருகின்றனர்.

’ஐபிஎல்  கோப்பை நிச்சயம்  இந்த அணிக்குத்தான்!’ ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ

இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை தனதாக்கி கொண்டிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சென்ற முறைகூட மும்பை இண்டியன்ஸ் டீமிடம் ஒரேஒரு ரன்னில் தோற்றுப்போனது. அதனால், இந்த ஆண்டு முதல் போட்டியிலிருந்தே சிஎஸ்கேவின் வெற்றி கதை தொடங்கும் என்றே நம்புவோம்.