ஆரம்பித்து வைத்த சச்சின் பைலட்…. வெளிப்படையாக வெடிக்க தொடங்கிய ராஜஸ்தான் காங்கிரசின் உட்கட்சி பூசல்..

ஆரம்பித்து வைத்த சச்சின் பைலட்…. வெளிப்படையாக வெடிக்க தொடங்கிய ராஜஸ்தான் காங்கிரசின் உட்கட்சி பூசல்..

ராஜஸ்தான் காங்கிரசின் இளம் தலைவரும், அம்மாநில துணை முதல்வருமான சச்சின் பைலட் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநிலத்தின் 3 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் குறித்த கேள்விக்கு சச்சின் பைலட், எங்களது 2 வேட்பாளர்களும் எங்களுடன் இருந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமிருந்து 100 சதவீத வாக்குகளை பெற்றனர்.

ஆரம்பித்து வைத்த சச்சின் பைலட்…. வெளிப்படையாக வெடிக்க தொடங்கிய ராஜஸ்தான் காங்கிரசின் உட்கட்சி பூசல்..

எங்களது வேட்பாளர்கள் இருவரும் வெற்றி பெறுவார்கள் நாங்கள் கூறி வந்தோம். நாங்கள் கூறியது உண்மையாகி உள்ளது. தேர்தலுக்கு முன்பு பரவிய எந்தவிதமான சந்தேகங்களும் மற்றும் யூகங்களும் ஆதாரமற்றவை என பதிலளித்தார். முதல்வர் அசோக் கெலாட் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டியது, காங்கிரஸ் கட்சியின் கொறடா மகேஷ் ஜோஷி ஊழல் தடுப்பு பிரிவில் புகார் கொடுத்தது உள்ளிட்ட தனது கட்சிகளின் அனைத்து கோரிக்கைகளையும் ஆதாரமற்றவை என சச்சின் பைலட் மறைமுக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஆரம்பித்து வைத்த சச்சின் பைலட்…. வெளிப்படையாக வெடிக்க தொடங்கிய ராஜஸ்தான் காங்கிரசின் உட்கட்சி பூசல்..

ராஜ்யசபா தேர்தலுக்கு முன் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பா.ஜ.க. குதிரை பேரத்தில் ஈடுபடுவதாகவும், தங்களது எம்.எல்.ஏ.களுக்கு தலா ரூ.25 முதல் ரூ.30 கோடி வரை பேரம் பேசப்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் ஆதரவளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களையும் ரிசார்ட்டில் தங்கவைத்தார். தற்போது அசோக் கெலாட்டின் குற்றச்சாட்டை சச்சின் பைலட் மறுத்து இருப்பது அந்த கட்சிக்குள் நிலவும் உட்கட்சி பூசலை வெளிப்படுத்தியுள்ளது.