“ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன் அல்ல; ஜல்லிக்கட்டு வில்லன்” – தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு!

“ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன் அல்ல; ஜல்லிக்கட்டு வில்லன்” – தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால்  பரபரப்பு!

தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை விமர்சனம் செய்யும் விதமாக தேனி புதிய பேருந்து நிலையத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன் அல்ல; ஜல்லிக்கட்டு வில்லன்” – தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால்  பரபரப்பு!

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான தேனியில் புதிய பேருந்து நிலையத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன் அல்ல; ஜல்லிக்கட்டு வில்லன் என நாட்டு மாடு நலச்சங்கம் சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.

“ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன் அல்ல; ஜல்லிக்கட்டு வில்லன்” – தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால்  பரபரப்பு!

இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனத்திற்கு சுவரொட்டிகளை ஒட்டிய கலைவாணர் என்பவர் அளித்துள்ள பேட்டியில், “நாட்டுமாடுகளை அழிக்கும் பணியை தான் தமிழக அரசு செய்து வருகிறது. ’தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் – 2019’ சட்டமாக நிறைவேற்ற பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு நாட்டுமாடு ஆர்வலர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு உள்ளது. இதில் மாடுகள் கருவுற ஊசிகளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். அதேசமயம் காளைகள் வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு மாடுகள் இனம் அழியும்.” என்றார்.

“ஓபிஎஸ் ஜல்லிக்கட்டு நாயகன் அல்ல; ஜல்லிக்கட்டு வில்லன்” – தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால்  பரபரப்பு!

துணை முதல்வர் ஓபிஎஸுக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால், நாட்டுமாடு நலச்சங்கத்தைச் சேர்ந்த கலைவாணன் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.