புதிய சாதனை படைத்த ஜி.எஸ்.டி. வசூல்… கடந்த ஏப்ரலில் ரூ.1.41 லட்சம் கோடி வசூல்

புதிய சாதனை படைத்த ஜி.எஸ்.டி. வசூல்… கடந்த ஏப்ரலில் ரூ.1.41 லட்சம் கோடி வசூல்

கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி அமைப்பு, வரி விகிதத்தை செயல்படுத்தும் நோக்கில் 2017 ஜூலை மாதத்தில் சரக்குகள் மற்றும் சேவைகள் (ஜி.எஸ்.டி.) வரியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பொதுவாக ஜி.எஸ்.டி. வாயிலாக, மாதந்தோறும் சராசரியாக ரூ.1 லட்சம் கோடி வருவாய் அரசுக்கு வந்து கொண்டு இருக்கிறது. கடந்த 2020-21ம் நிதியாண்டில் ஜி.எஸ்.டி. ரூ.11.36 லட்சம் கோடி (தோராயமாக) வசூலாகி இருந்தது.

புதிய சாதனை படைத்த ஜி.எஸ்.டி. வசூல்… கடந்த ஏப்ரலில் ரூ.1.41 லட்சம் கோடி வசூல்
ஜி.எஸ்.டி.

இந்நிலையில் இந்த நிதியாண்டின் முதல் மாதமான கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஜி.எஸ்.டி. ரூ.1.41 லட்சம் கோடி வசூலாகி புதிய சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து 7 மாதமாக கடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. மேலும் தொடர்ந்து ஜி.எஸ்.டி. வசூல் படிப்படியாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

புதிய சாதனை படைத்த ஜி.எஸ்.டி. வசூல்… கடந்த ஏப்ரலில் ரூ.1.41 லட்சம் கோடி வசூல்
ஜி.எஸ்.டி.

கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக பல மாநிலங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள், இரவு ஊரடங்கு,வார இறுதி ஊரடங்கு போன்றவற்றை அமல்படுத்தியுள்ள சூழ்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூல் புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கொரோனா காரணமாக வரும் மாதங்களில் ஜி.எஸ்.டி. வசூல் குறையும் அபாயம் உள்ளது.