பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யும் : அமைச்சர் சி.வி. சண்முகம்

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யும் : அமைச்சர் சி.வி. சண்முகம்

திண்டுக்கல் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் சி. வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யும் : அமைச்சர் சி.வி. சண்முகம்

திண்டுக்கல் உள்பட தமிழகத்தின் பல இடங்களில் சலூன் கடைகளை அடைத்து முடிதிருத்துவோர் போராட்டம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குரும்பட்டியை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி வெங்கடாசலத்தின் 12 வயது மகள் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கிருபானந்தன் என்ற 17 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லை என்று கூறி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் கிருபானந்தனை விடுவித்தது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் அரசு மேல்முறையீடு செய்யும் : அமைச்சர் சி.வி. சண்முகம்

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சி. வி. சண்முகம், திண்டுக்கல் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தமிழக அரசு நிச்சயம் மேல்முறையீடு செய்யும் . தீர்ப்பை ஆராய்ந்து தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.

இதனிடையே சிறுமியின் உடலில் கொடூரமான காயங்கள் இருந்தது உடற்கூறு ஆய்வு மூலம் தெரிய வந்தது. சிறுமியின் உடல் உறுப்புகளை காயம் இருந்ததாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இருப்பினும் குற்றம் நிரூபிக்கப்படாதது அதிர்ச்சியளிக்கிறது என்றும் வலுவான ஆதாரங்கள் சாட்சியங்கள் திரட்டி குற்றவாளிக்கு தண்டனை வழங்கவும் கோரிக்கை வலுத்துள்ளது.