கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி விடுவிப்பு!

 

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி விடுவிப்பு!

2020- 21 ஆம் நிதியாண்டின் அடுத்த தவணையாக தமிழகத்திற்கு ரூ.335 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி தமிழகம் உட்பட 14 மாநிலங்களுக்கு 6 ஆயிரத்து 195 கோடி விடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மாநில அரசுகளுக்கு ஜூன் மாதத்திற்கான வரி வருவாய் பங்கீட்டுத் தொகையாக அளிக்கப்பட்டுள்ள இந்த தொகை கொரோனா நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரமாக பயனளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு ரூ.335 கோடி நிதி விடுவிப்பு!

இதேபோல் சொட்டு நீர் பாசனத்திட்டத்துக்காக ரூ.4000 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு சொட்டு நீர் பாசனத்திட்டத்துக்கு ரூ. 478 கோடியே 79 லட்சம் ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மூலம் 1.76 ஹெக்டேர் நிலம் பயனடையும் எனக் கூறப்படுகிறது. மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து ரூ.1928.56 கோடி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.