திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதியாகிறது

 

திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதியாகிறது

ஒவ்வொரு முறையும் திமுக -தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிவரைக்கும் சென்று நிறைவேறாமல் போயிருக்கிறது. ஆனால் இந்த முறை திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதியாகிறது.

திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதியாகிறது

கருணாநிதி மேல் தனிப்பட்ட முறையில் நல்ல அபிப்ராயம் இருந்தும், தனது கோயம்பேடு திருமண மண்டபம் இடிக்கப்பட்டது திமுக ஆட்சியின் திட்டமிட்ட சதி என்று குற்றம்சாட்டி வந்த விஜயகாந்த், அந்த உறுத்தலின் காரணமாகவே திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று சபதமிட்டு 2011 தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவர் ஆனார்.

பின்னர் 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று கடைசி வரைக்கும் நம்பிக்கை பேச்சு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் பாஜகவுடன் கைகோர்த்தது தேமுதிக.

திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதியாகிறது

2016 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தங்கள் கூட்டணியில் வரும் என்று கடைசி நேரம் வரைக்கும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. முதல் நாள் வரைக்கும் நல்ல தகவல் கிடைத்ததை அடுத்துதான், பழம் கனிந்துவிட்டது; சீக்கிரத்தில் பாலில் விழும் என்று நம்பிக்கையுடன் சொன்னார் கருணாநிதி. ஆனால் அப்போது மக்கள் நல கூட்டணி உருவாகி விட்டதால் விஜயகாந்த் மக்கள் நல கூட்டணிக்கு தலைமை ஏற்று அந்த தேர்தலை சந்தித்தார்

தற்போதைய 2021 சட்டமன்ற தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்க திமுக தரப்பு பேசி வந்தது. ஆனால் அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளிடமும் மாறி மாறி தேமுதிக பேசி வந்த நிலையில் கடைசியில் இரண்டு கூட்டணியிலும் இடம் பெற முடியாமல் போனது. இதனால் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தோல்வியை சந்தித்தது.

திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதியாகிறது

நடந்து முடிந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், இனி வரும் உள்ளாட்சித் தேர்தலிலாவது திமுகவுடன் கைகோர்க்க வேண்டும் என்று தேமுதிமுக விரும்புவதாக தகவல். திமுகவும் அதே மன நிலையில் இருப்பதாகவும் தகவல். முதல்வர் ஸ்டாலினை விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ் மற்றும் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதியாகிறது

இதை அடுத்து அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார் . நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அதிர்ச்சியில் இருக்கும் தேமுதிகவினர் திமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதையே தலைமைக்கு வலியுறுத்தி வருகிறார்களாம். இது குறித்து தேமுதிக ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருப்பதாகவும் , கூட்டத்தில் நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை செய்து விட்டு முடிவை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்.

இந்த முறை திமுக -தேமுதிக கூட்டணி பழம் கனிந்தது ;பாலில் விழப்போவது உறுதி என்று இரு கட்சியினரிடையேயும் பேச்சு எழுந்திருக்கிறது.