அதிமுக கூட்டணிக்கு, பார்வர்டு பிளாக் வல்லரசு கட்சி ஆதரவு

 

அதிமுக கூட்டணிக்கு, பார்வர்டு பிளாக் வல்லரசு கட்சி ஆதரவு

தேனி

வரும் 2021 சட்டமன்ற தேர்தலில், அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக, அகில இந்திய பார்வர்டு பிளாக் வல்லரசு கட்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில் உள்ள அலுவலகத்தில் துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை அக்கட்சியின், பொதுச்செயலாளர் இளையரசு மற்றும் நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.

அதிமுக கூட்டணிக்கு, பார்வர்டு பிளாக் வல்லரசு கட்சி ஆதரவு

இந்த சந்திப்பின்போது 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது, தேனி மாவட்ட செயலாளர் கோட்டைச்சாமி, ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.