சட்டப்பேரவைக்கு மாட்டுவண்டி, குதிரை வண்டியில் வந்த மாஜி முதல்வர், எம்.எல்.ஏக்கள்

 

சட்டப்பேரவைக்கு மாட்டுவண்டி, குதிரை வண்டியில் வந்த மாஜி முதல்வர், எம்.எல்.ஏக்கள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

சட்டப்பேரவைக்கு மாட்டுவண்டி, குதிரை வண்டியில் வந்த மாஜி முதல்வர், எம்.எல்.ஏக்கள்

கர்நாடகாவில் கடந்தவாரம் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய போது முதல் நாளில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சட்டப்பேரவைக்கு சென்றனர். அதன்பின்னர் சைக்கிளில் பேரணியாக சட்டப்பேரவை சென்றனர்.

இந்நிலையில், கூட்டத் தொடர் இன்று முடியும் நிலையில் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் குதிரை வண்டியில் ஊர்வலமாக சட்டப்பேரவைக்கு சென்றனர். இது மட்டும் அல்ல இன்னமும் தொடர்ந்து பல்வேறு வடிவங்களில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்புக்கு எதிராக தங்கள் போராட்டங்கள் தொடரும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து சட்டமன்ற வளாகம் வரைக்கும் நடந்த குதிரை வண்டி பேரணியில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்று பரபரப்பை ஏற்படுத்தினர்.