முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் பேரறிவாளன்

 

முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் பேரறிவாளன்

பரோல் விடுப்பில் உள்ள பேரறிவாளன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் பேரறிவாளன்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பாக கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர் பேரறிவாளன். விடுதலை செய்யப்பட வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் தொடர்ந்து பல சட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.இந்த சூழலில் கொரோனா தொற்று காரணமாக பல மரணங்கள் சிறைச்சாலைகளில் அரங்கேறி வருகிறது. எனவே பல்வேறு நோய்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்கு சிறையில் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அவருக்கு நீண்ட விடுப்பு வழங்க கோரி பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்தார்.

முதல் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் பேரறிவாளன்

அற்புதம்மாள் கோரிக்கையை பரிசீலனை செய்த தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டார் . இதனால் பேரறிவாளன் கடந்த மாதம் 28ஆம் தேதி புழல் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்நிலையில் பரோலில் தனது சொந்த ஊரான ஜோலார்பேட்டையில் தங்கியுள்ள பேரறிவாளன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் தனது முதல் தடுப்பூசியை போலீசார் பாதுகாப்புடன் செலுத்திக் கொண்டார். பேரறிவாளனுக்கு தடுப்பூசி செலுத்திய போது அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.