டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு- இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டும் நேர்ந்த அவலம்

 

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு- இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டும் நேர்ந்த அவலம்

டெல்டா ப்ளஸ் கொரோன வைரசினால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது. 2 டேஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டும் அந்தப் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கிறார்.

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு- இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டும் நேர்ந்த அவலம்

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையில் உருமாறிய டெல்டா ப்ளஸ் கொரோனா வைரசினால் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 63 வயதுடைய பெண்மணி உயிரிழந்திருக்கிறார். கடந்த இருபத்தி ஏழாம் தேதி அன்று அவர் உயிரிழந்திருக்கிறார். டெல்டா பிளஸ் கொரோனா வைரசினால்தன் அவர் உயிரிழந்திருக்கிறார் என்பதை மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் பெண்மணி 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர் என்றும், அவர் எங்கும் பயணம் செல்லவில்லை என்றும் தகவல். அந்தப் பெண்மணிக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டிருக்கிறது. டெல்டா வைரஸ் தாக்குவதற்கு முன்பு அவர் நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறார்.

டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு- இரண்டு டோஸ் எடுத்துக்கொண்டும் நேர்ந்த அவலம்

சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றபோது கடந்த ஜூலை 21-ஆம் தேதி அவருக்கு ஒரு கொரோனா பாசிட்டிவ் என்று வந்திருக்கிறது. சிகிச்சை பெற்று வந்த அவர் ஜூலை 27-ஆம் தேதி உயிரிழந்திருக்கிறார். உயிரிழந்த பின்னர் அவரது மரபணு வரிசையை மும்பை கார்ப்பரேஷன் இப்போதுதான் பெற்றிருக்கிறது. அதில் டெல்டா பிளஸ் வைரசு தான் இவரது மரணத்திற்கு காரணம் என்பது தெரிய வந்திருக்கிறது.

இதையடுத்து அவரது குடும்பத்தினர் ஆறு பேருக்கும் பரிசோதனை செய்ததில், அந்தப் பெண்மணியின் குடும்பத்தினர் ஆறு பேரில் 2 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதித்திருப்பதி தெரியவந்துள்ளது. மீதி நான்கு பேருக்கான பரிசோதனை ரிப்போர்ட் இன்னும் வரவில்லை.

இதை அடுத்து டெல்டா பிளஸ் பாதித்த அந்த இரண்டு பேரின் உடல் நிலையை தொடர்ந்து கவனிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

டெல்டா பிளஸ் வகை கொரோனா கவலையளிக்கும் ஒரு வகை என்று மத்திய அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.