இந்தியாவில் முதன் முதலாக பெருங்காய சாகுபடி ஆரம்பம்

 

இந்தியாவில் முதன் முதலாக பெருங்காய சாகுபடி ஆரம்பம்

இந்தியர்களின் சமையலில் பெருங்காயத்திற்கு முக்கிய இடம் உண்டு.. இது சமையலில் வாசனை தருவதோடு வாய்வுத் தொல்லை மற்றும் ஜீரணத் தொல்லைகளை அகற்றக் கூடியது. இப்படிப்பட்ட பெருங்காயத்தை இது வரை இந்தியா சாகுபடி செய்ததில்லை. ஈரான், ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் 1,500 டன் அளவிற்கு பெருங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதற்காக சுமார் 942 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

இந்தியாவில் முதன் முதலாக பெருங்காய சாகுபடி ஆரம்பம்


இப்பொழுது முதன்முறையாக பெருங்காய சாகுபடியைத் இந்தியா தொடங்கி இருக்கிறது. பெருங்காய சாகுபடிக்கு, குளிர்ச்சியான, மற்றும் வறண்ட பிரதேசம் தேவை. இமயமலைப் பகுதியின் குளிர்ந்த பாலைவனப் பகுதிகள் – லடாக் மற்றும் இமாச்சல பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகள் பெருங்காய சாகுபடிக்கு ஏற்ற இடங்களாகும் என அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியாவில் முதன் முதலாக பெருங்காய சாகுபடி ஆரம்பம்


முதல் கட்டமாக இமாச்சலப் பிரதேசத்தின் லஹோல் பள்ளத்தாக்கு பகுதி அடையாளம் காணப்பட்டுள்ளது. ‘பயோசோர்ஸ் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்’ இதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. கடந்த 15 -ம் தேதி, இந்தியாவில் பெருங்காய சாகுபடி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் விதமாக லஹோல் பள்ளத்தாக்கின் குவாரிங் கிராமத்தில் முதல் நாற்று நடப்பட்டது. இது அந்தப் பகுதி விவசாயிகளுக்கு பெரும் லாபம் தரும் தொழிலாக இருக்கும். பெருங்காய சாகுபடியைத் தொடங்கியதன் மூலம் அதனை இறக்குமதி செய்ய ஆகும் செலவான சுமார் 900 கோடி ரூபாய் மிச்சமாகும்.

இந்தியாவில் முதன் முதலாக பெருங்காய சாகுபடி ஆரம்பம்