“தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை ” : முதல்வர் பழனிசாமி புகழாரம்!

 

“தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை ” :  முதல்வர் பழனிசாமி புகழாரம்!

தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராஜர் என தமிழக முதல்வர் பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.

“தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை ” :  முதல்வர் பழனிசாமி புகழாரம்!

என்ன திட்டம் கொண்டு வருவதானாலும், அதனால் என் மக்களுக்கு என்ன பயன் என்று கேட்டு, அதற்கேற்ப திட்டங்களைச் செயல்படுத்திய தலைவர் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர். அப்படி வாழ்ந்ததினால் தான் ஐம்பது வருடங்கள் கழித்தும், மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக எல்லா கட்சியினரும், ‘காமராஜர் ஆட்சியைக் கொடுப்போம்’ என்று சொல்லி ஒவ்வொரு தேர்தலிலும் வாக்கு கேட்டு வருகிறார்கள். படிக்காத மேதை, கருப்பு காந்தி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் காமராஜர் 2 அக்டோபர் 1975 ஆம் ஆண்டு காலமானார். ஆம்.. காந்தி பிறந்த நாளான இன்று காமராஜர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில் காமராசரின் 45வது நினைவு தினத்தையொட்டி முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தம் வாழ்நாள் முழுமையையும் சமூகத் தொண்டாற்றுவதற்காகவே அர்ப்பணித்து தமிழகத்தை நாடே போற்றத்தக்க வகையில் உயர்த்திட்ட கல்வித்தந்தை பெருந்தலைவர் காமராசர் அவர்களின் நினைவுநாளில் அவரை வணங்கி மகிழ்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.