கொரோனாவுக்கு பயப்படாமல் அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் ஆடும் இங்கிலாந்து அணி

 

கொரோனாவுக்கு பயப்படாமல் அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் ஆடும் இங்கிலாந்து அணி

கொரோனா நோய்த் தொற்றால் கடந்த எட்டு மாதங்களாக பெரிய அளவிலான போட்டிகள் நடைபெற வில்லை. ஆனால், இங்கிலாந்து கிர்க்கெட் வாரியம், சரியான பாதுகாப்பு நடைமுறையோடு அடுத்தடுத்த போட்டித்தொடர்களில் வீரர்களை களம் இறக்கி வருகிறது.

அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளோடு விளையாடிய இங்கிலாந்து அணி, கடந்த மாதம் பாகிஸ்தான் அணியோடு முக்கியமான தொடரை விளையாடியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அணியோடு மூன்று டெஸ்ட் போட்டிகளும், மூன்று டி20 போட்டிகளும் ஆடின.

கொரோனாவுக்கு பயப்படாமல் அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் ஆடும் இங்கிலாந்து அணி

முதல் டெஸ்ட் போட்டியில் த்ரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி. அடுத்த இரண்டு ஆட்டங்களும் டிராவில் முடிய 1: 0 எனும் கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து அணி.

முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாம் போட்டியில் இங்கிலாந்து அணியும் மூன்றாம் போட்டியில் பாகிஸ்தானும் வென்றது. இதனால் இருவருக்கும் கோப்பை பகிர்ந்தளிக்கப்பட்டது. ஆயினும் இங்கிலாந்து வீரர்கள் கடும் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

தற்போது பாகிஸ்தான் அனியோடு கிடைத்த வெற்றி சுவையோடு ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள தயாரகி விட்டது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டித் தொடருக்காக ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டுள்ளது. இரண்டு அணிகளும் இடையே மூன்று டெஸ்ட் போட்டிகளும் மூன்று டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

கொரோனாவுக்கு பயப்படாமல் அடுத்தடுத்த போட்டித் தொடர்களில் ஆடும் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா தொடரில் முதலில் முதலில் நடைபெற போவது டி20 போட்டிகள். அதற்கான முதல் போட்டியில் இன்று மோத உள்ளன. இன்று இரவு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு போட்டி தொடங்கும்.

ஆஸ்திரேலிய அணிதான் உலகின் நம்பர் 1 அணியாக வலம் வருகிறது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலும் வலுவாக உள்ளது. ஆனால், அதற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இங்கிலாந்து அணி உள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு பாகிஸ்தான் அணியோடு அடைந்த வெற்றி. மேலும் சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலனளிக்கும் என்று நம்பலாம்.

இங்கிலாந்து வெற்றி தொடருமா… ஆஸ்திரேலியா வெற்றி பெருமா என்பதை போட்டிகளே நமக்குச் சொல்லும். ஆனால், யார் வென்றாலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு நல்ல போட்டிகளைப் பார்த்தோம் என்ற திருப்தி கிடைக்கப்போவது மட்டும் உறுதி.