அசாமில் 3 சட்டப்பேரவை தொகுதியில் மறுவாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

 

அசாமில் 3 சட்டப்பேரவை தொகுதியில் மறுவாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..

அசாமில் 3 சட்டப்பேரவை தொகுதியில் மொத்தம் 4 வாக்குச்சாவடியில் வரும் 20ம் தேதியன்று மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6ம் தேதி என மொத்தம் 3 கட்டங்களாக நடைபெற்றது. அசாமில் தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்படும்.

அசாமில் 3 சட்டப்பேரவை தொகுதியில் மறுவாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
தேர்தல்

அசாமில் 2 கட்ட (ஏப்ரல் 1ம் தேதி) தேர்தலின்போது, பதார்கண்டி சட்டப்பேரவை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் காரில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தேர்தல் அதிகாரிகள் கட்டுப்பாட்டு அறைக்கு எடுத்து சென்றனர். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் இது தொடர்பாக 4 தேர்தல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய உத்தரவிட்டது. மேலும் குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தவும் நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அசாமில் 3 சட்டப்பேரவை தொகுதியில் மறுவாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு..
பா.ஜ.க.

தற்போது ரத்தாபரி, சோனாய் மற்றும் ஹப்லாங் சட்டப்பேரவை தொகுதிகளில் நான்கு வாக்குசாவடிகளில் வரும் 20ம் தேதியன்று மறுவாக்குப்பதிவு நடத்தும்படி அசாம் தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மேலும், இந்த வாக்குச்சாவடி பகுதிகளில் முரசு அடித்து மறுவாக்குப்பதிவு நடத்தப்படுவது குறித்து பரவலாக விளம்பரம் செய்ய வேண்டும். போட்டியிடும் வேட்பாளர்களிடம் தெரிவிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் உத்தரவிடப்பட்டது.