“நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு நாங்களே பெயர் வைக்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

“நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு நாங்களே பெயர் வைக்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீனாட்சியம்மன் திருக்கோவிலை சுற்றி மாசி வீதி, மேல மாசி வீதி, தெற்கு மாசி வீதி, வடக்கு மாசி வீதி ஆகிய 4 மாசி வீதிகளில் ஸ்மார்ட் சாலை திட்டத்தின் கீழ் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளும், அத்துடன் மதுரையின் பல பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி உள்ளிட்ட பல வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

“நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு நாங்களே பெயர் வைக்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

இந்நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரையில் ஸ்மார்ட்சிட்டி, பாதாள சாக்கடை குறித்து எழுப்பிய கேள்விக்கு, “நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு நாங்களே பெயர் வைக்க விரும்புகிறோம். நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எங்கள் ஆட்சி காலத்திலேயே செயல்படுத்த ஆசை” என்று பதிலளித்துள்ளார்.

“நாங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு நாங்களே பெயர் வைக்க வேண்டும்” : அமைச்சர் செல்லூர் ராஜு

முன்னதாக மதுரையில் ஸ்மார்ட்சிட்டி பணிகள் கடந்த 4 ஆண்டுகாலமாக நத்தை வேகத்தில் நடந்து வருவதாக மதுரை எம்பி சு. வெங்கடேசன் குற்றச்சாட்டியது குறிப்பிடத்தக்கது.