ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு வர கல்வித்துறை உத்தரவு!

 

ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு வர கல்வித்துறை உத்தரவு!

கொரோனா வைரஸ் தொற்றால் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அதனை ரத்து செய்யுமாறு பல தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையிலும், கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கும் என்று அறிவித்த அரசு, கொரோனா வைரஸின் அதிவேக பரவலால் ஜூன் 15 ஆம் தேதி முதல் தொடங்கு என்று அறிவிக்கப்பட்டது. இதனிடையே மீதமுள்ள 11 ஆம் வகுப்பு தேர்வுகளும் நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன் படி தேர்வுகளை நடத்த அனைத்து பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு வர கல்வித்துறை உத்தரவு!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்டை  https://t.co/MVvfY3GtcP என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறையில்லாது, பள்ளித்தலைமை ஆசிரியர்களை தொடர்பு கொண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், 10ஆம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத்தேர்வுப் பணிக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நடுநிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வுப்பணியில் முன்னுரிமை வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணி மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடு பணி இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து வகை பள்ளிகளிலும், ஆசிரியர்கள் அனைவரும் இன்று முதல் பணிக்கு வரவேண்டுமென கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தலைமை ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதாவது இருக்கிறதா என்பதை கண்டறிவதற்கும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.