தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

 

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்று முடிந்த இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 234 தொகுதிகளில் ஒரேகட்டமாக தேர்தல் நடந்து முடிந்த நிலையில், 75 மையங்களில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படவுள்ளன. வழக்கமாக தபால் ஓட்டுகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் இந்த முறை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, 80 வயதிற்கு மேற்பட்டோர், மாற்று திறனாளிகள் ஆகியோர் தபால் வாக்கு அளிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. இதனால் தமிழகம் முழுவதும் தபால் வாக்கு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து 5, 64,253 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

இதனிடையே வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள் அமலில் உள்ளத்துடன், தமிழகத்தில் முழு ஊரடங்கு இன்று அமலில் உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகளுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூம் திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குகள் எண்ணும் அறைக்கு கொண்டு வரப்பட்டன.இதையடுத்து முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.