பாதாள சாக்கடை மரணத்துக்கு மாநகராட்சியே பொறுப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி!

 

பாதாள சாக்கடை மரணத்துக்கு மாநகராட்சியே பொறுப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி!

தமிழ்நாட்டில் பாதாள சாக்கடைகள், கழிவுநீர் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதைத் தடைசெய்யவும், சுத்தம் செய்யும் பணியின்போது விஷ வாயு தாக்கி உயிரிழந்த தொழிலாளர்களுக்குப் போதுமான இழப்பீடு வழங்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்ய மனிதர்களைப் பணியமர்த்தும் பணியை ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற்கொள்கிறதா? என அறிக்கை அளிக்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

பாதாள சாக்கடை மரணத்துக்கு மாநகராட்சியே பொறுப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி!

இச்சூழலில் இன்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதாள சாக்கடைகளைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி உயிரிழப்பது தொடர்பான வழக்குகளில் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை எனவும், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பலருக்கு இழப்பீடுகள் வழங்கப்படவில்லை என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாதாள சாக்கடை மரணத்துக்கு மாநகராட்சியே பொறுப்பு – உயர் நீதிமன்றம் அதிரடி!

கடந்த விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவின்படி அறிக்கைத் தாக்கல் செய்யாத அரசின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபடுத்துவதால் ஏற்படும் மரணங்களுக்குச் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களே பொறுப்பேற்க வேண்டிய நேரம் வந்துள்ளதாகக் கூறினர். இதுபோன்ற ஏதேனும் மரணங்கள் நிகழ்ந்தால், அதற்குச் சம்பந்தப்பட்ட நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்பட்டு, உடனடி கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.