புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்

 

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்று இன்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. ஆனால் இன்னும் அந்த கட்சிக்கு முழு நேர புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ராகுல் காந்தி மீண்டும் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் தொடர்ந்து வெளிப்படையாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ராகுல் காந்தியோ தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்

இந்நிலையில் நேற்று காங்கிரஸ், புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடிப்பார் என தெரிவித்தது. இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மானு சிங்வி வீடியோ கான்பரன்சிங் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசுகையில், சோனியா காந்தி ஜி தலைவராக இருக்கிறார். முறையான நடைமுறைகள் செயல்படுத்தும் வரை சில காலம் அவர் தொடருவார். அதனை நடைமுறைப்படுத்துவதற்கான எதிர்கால் வெகுதொலைவில் இல்லை.அரசியல் அல்லது அரசியல் கட்சிகள் ஒரு வெற்றிடத்தை அனுமதிக்கவோ அல்லது சகித்துகொள்ளவோ இல்லை என்பது மிகவும் தெளிவாக உள்ளன. இயற்கையானது ஒரு வெற்றிடத்தை வெறுப்பது போல அரசியல் கட்சிகளும் ஒரு வெற்றிடத்தில் செயல்பட முடியாது.

புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும்வரை சோனியா காந்தி இடைக்கால தலைவராக நீடிப்பார்… காங்கிரஸ்
பதவிக்காலம் நாளை (இன்று) காலாவதியாகிறது என்பது உண்மைதான். கட்சி அரசியலமைப்பில் தேர்தலுக்கான ஒரு நடைமுறை உள்ளது. உங்களுக்கு தெரிந்ததுதான், காங்கிரஸ் காரிய கமிட்டி போன்றவற்றின் வாயிலாக புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது செல்கிறது. அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளது. காங்கிரஸ் செயற்குழு மூலம் மேற்கொள்ளப்படும் சரியான நடைமுறை உள்ளது. இது விரைவில் செய்யப்படும். உங்களுக்கு ஒரு முடிவு கிடைக்கும். இது காங்கிரஸ் அரசியலமைப்பில் எழுதப்பட்டுள்ளது. நாங்கள் அதனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம், அது செய்யப்படும் என தெரிவித்தார். ஆக இன்னும் கொஞ்சம் நாளைக்கு சோனியா காந்திதான் காங்கிரஸின் இடைக்கால தலைவராக நீடிப்பார் என்பது உறுதியாகி விட்டது.