ஜூனில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்… அப்பம் ராகுல் காந்தி இல்லையா?

 

ஜூனில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்… அப்பம் ராகுல் காந்தி இல்லையா?

எதிர்வரும் ஜூன் மாதத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்ந்தேடுக்கப்படுவார் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக நடைபெற்றது. அந்த கூட்டத்தில் எதிர்பார்த்த மாதிரியே புதிய தலைவர் தேர்ந்தெடுப்பது தொடர்பாகவும் பேச்சு நடைபெற்றது. தேர்தல்களுக்கு பொறுப்பான கட்சியின் குழுவான காங்கிரஸ் தேர்தல் ஆணையம் (சி.இ.ஏ.) கட்சியின் தேர்தல்களை நடத்த மே முதல் 30 வரை காலக்கெடுவை முன்மொழிந்தது. இருப்பினும், சில தலைவர்கள் குறிப்பாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்கு பொறுப்பானவர்கள், காங்கிரஸ் புதிய தலைவர் தேர்தல் சமயத்தில் மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல்களும் வர வாய்ப்புள்ளது இதனால் சிக்கல் வரும் என்று கருத்து தெரிவித்தனர்.

ஜூனில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்… அப்பம் ராகுல் காந்தி இல்லையா?
காங்கிரஸ்

காங்கிரஸ் காரிய கமிட்டியின் 12 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதியையும் காங்கிரஸ் தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்தது. இறுதியில், இரு தேர்தல்களுக்கான அட்டவணையும் கட்சி தலைவரின் முடிவுக்கு விடப்பட்டது. தனக்கு தலைவர் பதவியில் விருப்பம் என்று ராகுல் காந்தி ஏற்கனவே தெரிவித்து விட்டார். அதேசமயம் சில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுலை சமாதானம் செய்து மீண்டும் தலைவராக பொறுப்பேற்க செய்து விடலாம் என்று இருந்தனர். ஆனால் தற்போது தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறுவது உறுதியாகி விட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருப்பினும், ராகுலை தேர்தலில் போட்டியிட சம்மதிக்க வைத்துவிடலாம் என்று நம்பிக்கையில் உள்ளனர்.

ஜூனில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர்… அப்பம் ராகுல் காந்தி இல்லையா?
சீதாராம் கேசரி

காங்கிரஸ் கட்சியின் விதிமுறைகளின்படி, காரியக்கமிட்டியில் மொத்தம் உள்ள 25 உறுப்பினர்களில் 12 பேர் நிர்வாகிகளால் மற்றும் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 13 உறுப்பினர்களை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவர் நியமிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் கடைசியாக 2000ம் ஆண்டு உட்கட்சித் தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதற்கு முன்பு 1997-ம் ஆண்டு சீதாராம் சேசரி தலைவராக இருந்தபோது உட்கட்சி தேர்தல் நடந்தது.