கட்சி மாறியது கூட தெரியவில்லை.. இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுத்த காங்கிரஸ்….

 

கட்சி மாறியது கூட தெரியவில்லை..  இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுத்த காங்கிரஸ்….

மத்திய பிரதேசத்தில், கட்சி மாறியது கூட தெரியாமல், தற்போது பா.ஜ.க.வில் இருக்கும் தொண்டரை இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு தேர்ந்தெடுத்ததால் அந்த கட்சிக்கு கடும் கேலிக்கு ஆளாகியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் தற்போது பா.ஜ.க. உறுப்பினராக இருப்பவர் ஹர்ஷித் சிங்காய். இவர் இதற்கு முன் காங்கிரஸில் இருந்தார். கடந்த மார்ச் மாதத்தில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸிலிருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்த போது சிங்காயும் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்த சூழ்நிலையில் சிங்காய் பா.ஜ.க.வில் இணைந்தது கூட தெரியாமல் காங்கிரஸ் மேலிடம் அவரை ஜபல்பூர் இளைஞர் காங்கிரஸ் பிரிவு செயலாளராக தேர்ந்தெடுத்துள்ளது.

கட்சி மாறியது கூட தெரியவில்லை..  இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுத்த காங்கிரஸ்….
ஹர்ஷித் சிங்காய்

கடந்த 10 முதல் 12ம் தேதி வரை நடைபெற்ற மத்திய பிரதேச இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் அந்த கட்சியில் இல்லாத சிங்காய் 12 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதால், 18ம் தேதியன்று மத்திய பிரதேச இளைஞர் காங்கிரஸின் ஜபல்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதியின் செயலாளராக சிங்காய் அறிவிக்கப்பட்டார். சிங்காய் கட்சியில் இல்லை என்பதை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கவனிக்கவில்லை மற்றும் குறைந்தபட்சம் சிங்காய் கட்சியில் இல்லை என்று கூட சொல்லவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கட்சி மாறியது கூட தெரியவில்லை..  இளைஞர் காங்கிரஸ் பதவிக்கு பா.ஜ.க. தலைவரை தேர்ந்தெடுத்த காங்கிரஸ்….
இளைஞர் காங்கிரஸ்

இது தொடர்பாக ஹர்ஷித் சிங்காய் கூறுகையில், 3 ஆண்டுகளுக்கு முன் நான் காங்கிரஸில் இருந்த போது இளைஞர் காங்கிரஸ் தேர்தலுக்காக நான் வேட்பு மனு தாக்கல் செய்தேன். 2018 மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல், 2019 நாடாளுமன்ற தேர்தல் காரணமாக இளைஞர் காங்கிரஸ் பிரிவு தேர்தல் தாமதமானது. இதனைதொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் இருந்து எனது பெயரை நீக்கும்படி கட்சியிடம் வேண்டுகோள் விடுத்தேன் ஆனால் அவர்கள் நீக்கவில்லை என்று தெரிவித்தார். இது தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் மக்ஸூத் மிர்சா கூறுகையில், சிங்காய் வேண்டும் என்றே வேட்புமனுவை திரும்பபெறவில்லை. தேர்தல்கள் ஆன்லைனில் நடைபெற்றது. சுமார் 1,800 பேர் மனு தாக்கல் செய்து இருந்ததால் யாரும் கவனிக்கவில்லை. சிங்காய் பிரபலமான தலைவர் கிடையாது என்று தெரிவித்தார்.