’’ராகுல் காந்தியை பூணூல் தரித்த பிராமணர் என்று அடையாளப் படுத்தியதை கண்டு பலர் நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன்’’

’’ராகுல் காந்தியை பூணூல் தரித்த பிராமணர் என்று அடையாளப் படுத்தியதை கண்டு பலர் நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன்’’

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேர்ந்த பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவராக அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலினால் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் தமிழர்களை ஒருங்கிணைக்கும் தளபதி தலைமையில் இந்தியாவில் வென்றெடுப்போம் என்று திமுகவின் அதிகாரப்பூர்வ முரசொலி நாளிதழில் கட்டுரை ஒன்றினை எழுதியிருக்கிறார். காங்கிரஸ் பிரமுகரான பீட்டர் அல்போன்ஸ் , தளபதி தலைமையில் இந்தியாவை வென்றெடுப்போம் என்று சொல்லி இருப்பது குறித்து காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது.

’’ராகுல் காந்தியை பூணூல் தரித்த பிராமணர் என்று அடையாளப் படுத்தியதை கண்டு பலர் நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன்’’

ஒரே நாடு, ஒரே மக்கள், ஒரே மதம், ஒரே மொழி , ஒரே கலாச்சாரம் என்று போலி தேசியம் பேசும் அரசியலுக்கு மாற்று என்பது ’தலைநிமிரும் தமிழகம்’ என்ற முழக்கம் மட்டுமே. தளபதியின் தலைமையில் நாம் தமிழராய் ஒன்றிணைவோம். அதன் மூலம் இந்தியாவை வென்றெடுப்போம் என்று தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, ‘’தமிழர்களாய் ஒருங்கிணைவோம்! தளபதி தலைமையில் இந்தியாவை வென்றெடுப்போம் என்ற தலைப்பில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய தலைவருமான பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் முரசொலியில் ஒரு முழுப்பக்க கட்டுரை எழுதியுள்ளார்.

’’ராகுல் காந்தியை பூணூல் தரித்த பிராமணர் என்று அடையாளப் படுத்தியதை கண்டு பலர் நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன்’’

“பாஜகவினரை விடதாங்கள் தரமான ஹிந்துக்கள் என்று காண்பிப்பதற்கு ‘அவர்கள்’ (காங்கிரஸ்) எடுத்துக்கொண்ட முயற்சிகளால் அவர்களது இயற்கையான வாக்காளர்களிடம் இருந்தும் அந்நியமாகி விட்டனர். ராகுல் காந்தியை “பூணூல் தரித்த பிராமணர்” என்று அடையாளப்படுத்தியதை கண்டு காங்கிரஸ்காரர்களில் பலர் நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன் (நான் உட்பட). மொத்தத்தில் பாஜக விரித்த வலையில் காங்கிரஸ் விழுந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அந்த குழப்பம் இன்னும் தொடர்வதாகவே நான் கருதுகிறேன்.

உத்தரகாண்ட் தேர்தலில் பாஜக பிரச்சாரம் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று இருந்தால், காங்கிரஸ் பிரச்சாரம் ‘ஜெய் கணேஷ்’ ஆக இருக்கும் என்று அறிவித்திருப்பதை சரியான தேர்தல் யுக்தியா?” என்று பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்கள் கேட்டிருப்பது காங்கிரஸ் கட்சி புதைகுழிக்குள் போய் விட்டது என்பதை தெளிவாக்கி இருப்பதோடு, அரசியல் அதிகாரம், பதவி என்பது மூத்த அரசியல்வாதிகளையும் விட்டு வைக்காமல், சொந்த கட்சியையும், அதன் தலைவர்களையும் கை விட்டு விடும் நிலைக்கு தள்ளிவிடும் என்பதை உணர்த்துகிறது.

’’ராகுல் காந்தியை பூணூல் தரித்த பிராமணர் என்று அடையாளப் படுத்தியதை கண்டு பலர் நெஞ்சுக்குள் அழுததை நான் அறிவேன்’’

இந்த கட்டுரைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிப்பார்களா? தி மு க அரசு கொடுத்த பதவிக்காக சொந்த கட்சியையே மட்டம் தட்டி பேசுவதை தட்டி கேட்பார்களா?அல்லது பீட்டர் அல்ஃபோன்ஸ் அவர்களை போன்று தி மு க விடம் அடிபணிந்து அடிமைகளாக இருப்பார்களா? காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்’’என்கிறார்.