அசாமில் பா.ஜ.க.வுக்கு செக் வைத்த காங்கிரஸ்.. 5 கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்த கை சின்னம் கட்சி

அசாமில் பா.ஜ.க.வுக்கு செக் வைத்த காங்கிரஸ்.. 5 கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்த கை சின்னம் கட்சி

அசாமில் எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நோக்கில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி உள்பட மொத்தம் 5 கட்சிகளுடன் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகிறது.

அசாமில் முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போதைய பா.ஜ.க. அரசின் ஆட்சி காலம் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. அசாமில் 126 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக உள்ளன.

அசாமில் பா.ஜ.க.வுக்கு செக் வைத்த காங்கிரஸ்.. 5 கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்த கை சின்னம் கட்சி
பா.ஜ.க.

எதிர்வரும் தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் எண்ணத்தில் அம்மாநிலத்தில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, சி.பி.ஐ., சி.பி.ஐ. (எம்), சி.பி.ஐ. (எம்.எல்.) மற்றும் ஏ.ஜி.எம். ஆகிய 5 கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை காங்கிரஸ் அமைத்துள்ளது. இந்த தகவலை காங்கிரஸ் உள்ளிட்ட 6 கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தன. அதேசமயம் கூட்டணியின் முதல் வேட்பாளர் என்பது மெகா கூட்டணி மவுனம் சாதிக்கிறது.

அசாமில் பா.ஜ.க.வுக்கு செக் வைத்த காங்கிரஸ்.. 5 கட்சிகளுடன் மெகா கூட்டணி வைத்த கை சின்னம் கட்சி
காங்கிரசின் மெகா கூட்டணி தலைவர்கள்

கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் கூறுகையில், ஒரே நாளில் எல்லா கேள்விகளுக்கும் விடை கிடைக்காது என்று பதில் அளித்தார். பா.ஜ.க.வுக்கு எதிரான கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளதால் எதிர்வரும் தேர்தல் பா.ஜ.க.வுக்கு வெற்றி அவ்வளவு எளிதில் வசப்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.