பாமகவின் கனவு திட்டத்தை செயல்படுத்துவதாக சொல்லிவிட்டார் முதல்வர் – அன்புமணி மகிழ்ச்சி

பாமகவின் கனவு திட்டத்தை செயல்படுத்துவதாக சொல்லிவிட்டார்  முதல்வர் – அன்புமணி மகிழ்ச்சி

பாமகவின் கனவு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்துவதாக சொல்லிவிட்டார் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார்.

பாமகவின் கனவு திட்டத்தை செயல்படுத்துவதாக சொல்லிவிட்டார்  முதல்வர் – அன்புமணி மகிழ்ச்சி

இதுகுறித்த அவரது அறிக்கையில், ”இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அம்மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ.14,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்; அத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.700 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது என்று அறிவித்திருக்கிறார். இராமநாதபுரம் மாவட்டத்தை வளப்படுத்தும் இத்திட்டம் குறித்த முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

பாமகவின் கனவு திட்டத்தை செயல்படுத்துவதாக சொல்லிவிட்டார்  முதல்வர் – அன்புமணி மகிழ்ச்சி

காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று 20 ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. இராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தி.மு.க ஆட்சியில் 2008-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அப்போதே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தால் ரூ.3,290 கோடியில் நிறைவேற்றி முடிக்கப்பட்டிருக்கும். ஆனால், இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தவிர, அதற்குத் தேவையான நிதி ஒதுக்கப்படாததைச் சுட்டிக்காட்டி, அத்திட்டத்திற்கு உடனடியாக நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று கடந்த 12 ஆண்டுகளாக பா.ம.க. வலியுறுத்தி வருகிறது. நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக காவிரி – வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மதிப்பு இப்போது ரூ.14,000 கோடியாக அதிகரித்திருக்கிறது. இது பா.ம.க.வின் கனவுத் திட்டங்களில் ஒன்று. 8.44 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாகத் திகழக் கூடிய இந்தத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

பாமகவின் கனவு திட்டத்தை செயல்படுத்துவதாக சொல்லிவிட்டார்  முதல்வர் – அன்புமணி மகிழ்ச்சி