‘சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை’ பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு!

‘சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை’  பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு!

சிவசங்கர் பாபா மீதான பாலியல் தொல்லை வழக்கில் அவரது பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு எடுத்துள்ளது.

‘சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை’  பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு!

சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்த பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தன. புகாரை அடுத்து சிவசங்கர் பாபா மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதன் காரணமாக சிவசங்கர் பாபா கடந்த மாதம் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார் . அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவரை முன்னாள் மாணவிகள் 18 பேர் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக புகார் அளித்த நிலையில் அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘சிவசங்கர் பாபாவுக்கு உடந்தை’  பள்ளி ஆசிரியைகள் 5 பேரிடம் விசாரிக்க சிபிசிஐடி முடிவு!

இந்நிலையில் சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள், ஊழியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. திங்கட்கிழமை முதல் பள்ளி ஆசிரியைகளை நேரில் வரவழைத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் பணியாற்றும் 5 ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது. சிறையிலிருக்கும் சிவசங்கர் பாபா மீது 3 போக்சோ வழக்கு உள்ள நிலையில் ஆதாரங்களை திரட்ட சிபிசிஐடி தீவிரம் காட்டி வருகிறது.