“கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது” – முத்தரசன் பேட்டி

 

“கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது” – முத்தரசன் பேட்டி

சேலம்

தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களை ரத்துசெய்த, தமிழக அரசின் உத்தரவுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தையொட்டி, சேலம் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிவைத்து, முத்தரசன் மரியாதைச் செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேளாண் சட்டத்திற்கு எதிராகவும், தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்ற அச்சம் காரணமாகவே, அரசு கிராம சபை கூட்டத்தை ரத்துசெய்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், பிரதமர் மோடியிடம் நற்பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, முதல்வர் தமிழகத்தில் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ளதாக கூறிய முத்தரசன், எனினும் திட்டமிட்டபடி பேரணி நடக்கும் என்றும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

“கிராமசபை கூட்டத்தை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது” – முத்தரசன் பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட் என்பது முக்கியமில்லை என்றும், பாஜகவை தமிழகத்தில் கால் ஊன்றவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டுமே தங்கள் கூட்டணிக்கு உள்ளதாகவும் கூறினார்.

மேலும், மக்கள் வரிப்பணத்தில் தற்போது முதல்வர் குறித்து விளம்பரங்கள் அதிகளவில் வெளியிடப்பட்டு வருவதாக குற்றம்சாட்டிய முத்தசரன், இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் கூறினார்