கங்கனாவை தொடர்ந்து சோனு சூட்டை குறிவைக்கும் சிவ சேனா? .. கட்டிட விவகாரத்தில் பி.எம்.சி. போலீசில் புகார்

 

கங்கனாவை தொடர்ந்து சோனு சூட்டை குறிவைக்கும் சிவ சேனா? .. கட்டிட விவகாரத்தில் பி.எம்.சி. போலீசில் புகார்

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது 6 மாடி குடியிருப்பை அனுமதி பெறாமல் ஹோட்டலாக மாற்றுவதாக அவருக்கு எதிராக போலீசில் மும்பை மாநகராட்சி புகார் கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நடிகர் சோனு சூட் உதவினார். ஆனால் சோனு சூட்டை சிவ சேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இதன் எதிரொலியாக சோனு சூட் முதல்வர் உத்தவ் தாக்கரேவை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. தற்போது சோனு சூட்டுக்கு எதிராக போலீசில் மும்பை மாநகராட்சி புகார் கொடுத்துள்ளது. மும்பையின் ஜூஹூவில் பாலிவுட் நடிகர் சோனு சூட்டுக்கு சொந்தமான ஆறு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தை தங்களது அனுமதியில்லாமல் சோனு சூட் ஹோட்டலாக மாற்றுவதாக பிரஹன் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி.) போலீசில் புகார் கொடுத்துள்ளது. ஆனால் பி.எம்.சி.யின் குற்றச்சாட்டை சோனு சூட் மறுத்துள்ளார்.

கங்கனாவை தொடர்ந்து சோனு சூட்டை குறிவைக்கும் சிவ சேனா? .. கட்டிட விவகாரத்தில் பி.எம்.சி. போலீசில் புகார்
சோனு சூட்

மேலும் இது தொடர்பாக அவர் கூறியதாவது: பி.எம்.சி.யிலிருந்து கட்டிடத்தை மாற்றியமைக்க ஒப்புதல் பெற்றுள்ளேன். இது மகாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்கு உட்பட்டது. கோவிட்-19 காரணமாக இந்த அனுமதி வரவில்லை. எந்த முறைகேடுகளும் இல்லை. நான் எப்போதும் சட்டத்துக்கு கட்டுப்படுகிறேன். தொற்றுநோய் சமயத்தில் கோவிட்-19 வாரியர்ஸ் (பணியாளர்கள்) தங்க வைக்க வீடாக பயன்படுத்தப்பட்டது. அனுமதி கிடைக்கவில்லை என்றால், நான் அந்த கட்டிடத்தை மீண்டும் ஒரு குடியிருப்பு கட்டமைப்புக்கு மாற்றுவேன். மும்பை நீதிமன்றத்தில் பி.எம்.சி.யின் புகாருக்கு எதிராக நான் மேல்முறையீடு செய்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கங்கனாவை தொடர்ந்து சோனு சூட்டை குறிவைக்கும் சிவ சேனா? .. கட்டிட விவகாரத்தில் பி.எம்.சி. போலீசில் புகார்
பாலிவுட் நடிகை கங்கனா ரானவத்

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மும்பை போலீஸை விமர்சனம் செய்தது முதல்நடிகை கங்கனா ரானவத்துக்கும், மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியான சிவ சேனாவுக்கும் இடையே கடந்த பல மாதங்களாக கடும் வார்த்தை போர் நிலவுகிறது இந்த சூழ்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் மும்பையில் உள்ள கங்கனாவுக்கு சொந்தமான அலுவலகத்தை சட்டவிரோத கட்டிடம் என்று கூறி மும்பை மாநகராட்சி அதனை இடித்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.